/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
27ல் அஞ்சல் சேவை குறை தீர்வு முகாம்
/
27ல் அஞ்சல் சேவை குறை தீர்வு முகாம்
ADDED : ஜூன் 21, 2024 09:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் -27ம் தேதி மாலை 4:00 மணிக்கு, அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
அஞ்சலக வாடிக்கையாளர், ஏதேனும் குறைகள் இருந்தால், தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம்என்கிற முகவரியில், வரும் -26ம் தேதி மாலைக்குள் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.
மேலும், வரும் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கும்,அஞ்சல் சேவை குறை தீர்வு முகாமிலும் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறினார்.