/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நத்தம் பட்டா வழங்காததால் கண்டனம் போஸ்டரால் உத்திரமேரூரில் சலசலப்பு
/
நத்தம் பட்டா வழங்காததால் கண்டனம் போஸ்டரால் உத்திரமேரூரில் சலசலப்பு
நத்தம் பட்டா வழங்காததால் கண்டனம் போஸ்டரால் உத்திரமேரூரில் சலசலப்பு
நத்தம் பட்டா வழங்காததால் கண்டனம் போஸ்டரால் உத்திரமேரூரில் சலசலப்பு
ADDED : மார் 11, 2025 12:25 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, எண்டத்துார் சாலை, தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்பதை குறிக்கும் போஸ்டர் சுவரில் ஒட்டப்பட்டு உள்ளது.
போஸ்டரில் உள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வேடபாளையம் சர்வே எண் 495/2ல், 82 பயனாளிகளுக்கு பட்டா அளிக்கப்பட்டு, அதில், இரு மனைப்பிரிவுகளுக்கு மட்டும் நத்தம் பட்டா அளிக்கப்பட்டு உள்ளது.
மற்ற 80 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா அளிக்கப்படாமல் வட்ட ஆட்சியர் அலுவலக தரகர்களால் குடிமனைப் பட்டா பெற்றவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தரகர்கள் கட்டுப்பாட்டில் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளதால், கலெக்டர் ஆணையிட்டும், உத்திரமேரூர் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
நத்தம் பட்டா 80 பயனாளிகளுக்கு அளிக்க அக்கறை காட்டவில்லை என்றும், மனைப்பிரிவுகளின் வரைபடம், நத்தம் பட்டா, 'அ-' பதிவேடு ஆகிய படங்கள் இணைக்கப்பட்டு, சமூக சமத்துவ படை கட்சி - 63855 65395 என, குறிப்பிட்டு உள்ளது.
இந்த போஸ்டரால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.