/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போஸ்டர் போலி நகை அடகு வைத்து மோசடி காஞ்சியில் 123 பேருக்கு போலீஸ் வலை
/
போஸ்டர் போலி நகை அடகு வைத்து மோசடி காஞ்சியில் 123 பேருக்கு போலீஸ் வலை
போஸ்டர் போலி நகை அடகு வைத்து மோசடி காஞ்சியில் 123 பேருக்கு போலீஸ் வலை
போஸ்டர் போலி நகை அடகு வைத்து மோசடி காஞ்சியில் 123 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 16, 2024 08:34 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இயங்கும் இந்தியன் வங்கிகளில், கடந்தாண்டு அடமான நகைகள் சம்பந்தமான ஆய்வு நடந்தது. அப்போது, அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் எடை, தரம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் காரைப்பேட்டை, கம்மவார்பாளையம், சங்கரமடம் அருகில் உள்ள மூன்று இந்தியன் வங்கி கிளைகளில், 2023 மே முதல் டிசம்பர் வரை, அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டன. தங்க முலாம் பூசிய நகைகள் அடமானம் வைக்கப்பட்டது தெரியவந்தது.
போலி நகைகளை அடமானம் வைத்த நபர்களின் விபரங்களை தயார் செய்து, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜாராமன், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து இருந்தார்.
போலீசார் விசாரணையில், மோசடி செய்வதற்காகவே, கவரிங் நகைகளுக்கு தங்கமுலாம் பூசி நகைகளை தயார் செய்தது தெரியவந்தது. அந்த வகையில், போலி தங்க நகை அடகு வைத்து, காரைபேட்டை வங்கி கிளையில் 1.51 கோடி ரூபாய், சங்கரடம் அருகில் உள்ள வங்கி கிளையில் 66.80 லட்சம் ரூபாயும், கம்மவார்பாளையம் இந்தியன் வங்கியில் 35.21 லட்சம் ரூபாயும் என, மொத்தம் 2.53 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன், 35, பிரகாஷ், 38, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேந்தர் குமார், 38 ஆகிய மூவரை, கடந்த ஏப்ரலில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ், 38, மற்றும் காஞ்சிபுரம் திம்மசமுத்திரத்தைச் சேர்ந்த ரவிசந்திரன், 35, ஆகிய இருவர் கைதாகினர்.
இந்த வழக்கில் ஐந்து பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்ட, சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
அதேபோல், சில ஆயிரம் கமிஷன் தொகைக்காக, போலி நகைகள் என தெரிந்தே, ஏராளமான நபர்கள், வங்கிககளில் அடமானம் வைத்துள்ளனர். அடமானம் வைத்து பெறப்பட்ட தொகை, தரகர்கள் மூலம், இந்த மோடியில் ஈடுபட்டவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது. பெரிய அளவிலான நெட்வொர்க் இந்த மோடியில் ஈடுபட்டது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கமிஷன் தொகைக்காக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தவர்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள், நகையை தயாரித்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் என, மொத்தம் 123 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்ய விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.