/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓராண்டிற்குள் பவுடரான தொடூர் நெற்களம்
/
ஓராண்டிற்குள் பவுடரான தொடூர் நெற்களம்
ADDED : மே 14, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, தொடூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2022- - 23ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.
இதில், 10.50 லட்சம் ரூபாய் செலவில், 18 மீட்டர் அகலமும், 15 மீட்டர் நெற்களம் கட்டி கொடுக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
ஒராண்டு நிறைவு பெறுவதற்குள், நெற்களம் சேதம் ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், அறுவடை செய்த நெல்லை உலர்த்தவும், நெல் மூட்டைகளை களத்தில் அடுக்கவும் முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
எனவே, தொடூர் கிராமத்தில் சேதமடைந்த நெற்களத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

