தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'குரூப் - 2' தேர்வுக்கு 8ம் தேதி முதல் பயிற்சி

'குரூப் - 2' தேர்வுக்கு 8ம் தேதி முதல் பயிற்சி

'குரூப் - 2' தேர்வுக்கு 8ம் தேதி முதல் பயிற்சி


ADDED : ஜூலை 03, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், 'குரூப் - 2' பணிக்கான 507 பணியிடங்களும், குரூப் 2ஏ பதவிகளுக்கான 1,820 பணியிடங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு தயாராகும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள், காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவசபயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஜூலை 8 முதல் துவங்கி நடைபெற உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது போட்டோ, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us