/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமரம்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க தடுப்பு தேவை
/
அமரம்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க தடுப்பு தேவை
அமரம்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க தடுப்பு தேவை
அமரம்பேடு கூட்டுச்சாலையில் விபத்தை தடுக்க தடுப்பு தேவை
ADDED : ஏப் 22, 2024 05:31 AM

படப்பை : குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, அமரம்பேடு - இருங்காட்டுக்கோட்டை நெடுஞ்சலை இணையும் கூட்டுச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இங்கு மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இங்கு சாலையை நடந்து, கடந்து செல்வோரும் விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த வழியே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
எனவே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிற்சாலைகள் சி.எஸ்.ஆர்.,எனப்படும் தொழிற்சாலை சமூக பொறுப்பு நிதியில் இங்கு தானியங்கி சிக்னல், மின் விளக்கு அமைக்க வேண்டும்.
அல்லது போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சாலை குறுக்கே பேரிகாட் தடுப்புகளையாவது அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.