/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைதி தற்கொலை முயற்சி: புழல் சிறையில் சலசலப்பு
/
கைதி தற்கொலை முயற்சி: புழல் சிறையில் சலசலப்பு
ADDED : ஜூலை 16, 2024 12:55 AM
புழல், புழல் சிறையில் விசாரணை கைதியாக, தண்டையார்பேட்டை, நாவலர் குடியிருப்பைச் சேர்ந்த 'கருப்பு' மணி, 28, என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை முயற்சி வழக்கில், கடந்த மே 5ம் தேதி கைது செய்யப்பட்டுஇருந்தார்.
இந்த நிலையில், மணியின் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக, சிறையில் மனு கொடுத்து பார்க்க வந்த உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மணி, சிறையில் இருந்த பெயின்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கி விழுந்த அவரை, போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.