/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
புதர் மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
புதர் மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
புதர் மண்டிய வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஜூன் 18, 2024 11:14 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில், செல்லியம்மன் கோவில் குளத்தில் இருந்து விவேகானந்தர் நகர் வழியாக மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் புதர்போல மண்டி, வடிகால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வழியாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகும் சூழல் உள்ளது.
எனவே, திருப்பருத்திக்குன்றத்தில் மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.