/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாத்திடுங்கள்'
/
'வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாத்திடுங்கள்'
'வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாத்திடுங்கள்'
'வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாத்திடுங்கள்'
ADDED : மே 10, 2024 09:23 PM
காஞ்சிபுரம்:கடுமையான வெப்ப அலை வீசுவதால், கால்நடைகளுக்கு தேவையான சுத்தமான குடிநீரை, தொட்டிகளில் நிரப்பி வைக்க வேண்டும். கால்நடைகளை திறந்தவெளியிலும், சாலைகளிலும் விடாமல், பாதுகாப்பான இடங்களிலும், கொட்டகைகளிலும் பராமரிக்க வேண்டும்.
கருவுற்ற, பாலுாட்டும் கால்நடைகள், இளங்கன்றுகள், நிழலான பகுதிகளில் பராமரிக்க வேண்டும். வெப்ப அலையால் பாதிப்படைந்த கால்நடைகளை, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ஆட்டுக்கொட்டகைகள், மாட்டு தொழுவங்கள், கோழி கொட்டகைகள் ஆகியவற்றில் ஈரமான கோணிகளை கட்டி வைத்து, வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம்.
செல்ல பிராணிகளை வளர்ப்போர், கார்களில் தனியே அவற்றை விட்டு பூட்டி வைத்து செல்லாமல், உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.