/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு இடத்தில் வணிக கட்டடம் தடுக்க வலியுறுத்தி காஞ்சியில் தர்ணா
/
அரசு இடத்தில் வணிக கட்டடம் தடுக்க வலியுறுத்தி காஞ்சியில் தர்ணா
அரசு இடத்தில் வணிக கட்டடம் தடுக்க வலியுறுத்தி காஞ்சியில் தர்ணா
அரசு இடத்தில் வணிக கட்டடம் தடுக்க வலியுறுத்தி காஞ்சியில் தர்ணா
ADDED : மார் 04, 2025 01:50 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர்வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று காலை, நடந்தது.
ஆக்கிரமிப்பு, உதவித்தொகை, பட்டா மாறுதல் என, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 571 பேர் நேற்றுமனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கஅறிவுறுத்தினார்.
குடும்ப அட்டை வேண்டி மனு அளித்த உத்திரமேரூர் தாலுகா, பம்ப் ரூம் தெருவைச் சேர்ந்த சத்தியா என்பவருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்குஊன்றுகோல், மற்றும் வட்டார வளர்ச்சி திட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை, பயனாளிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
கூட்டரங்கு வெளியே, வாலாஜாபாத், கோபால் நாயுடு சந்து தெருவைச் சேர்ந்தவர் பலர், தங்கள் பகுதியில் உள்ள அரசு இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தர்ணா போராட்டம்நடத்தினர்.
அப்பகுதியினர் மனுவில் கூறியிருப்பதாவது:
வாலாஜாபாத்தில் உள்ள தங்கள் பகுதியில்,30 சென்ட் நத்தம் புறம்போக்கு வகைப்பாடு கொண்ட அரசு இடம் உள்ளது. இந்த இடத்தில் தனி நபர் ஒருவர், வணிக ரீதியிலான கட்டடம் கட்டிவருகிறார்.
இதுகுறித்து நாங்கள் அவரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசுகிறார். எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். அப்பகுதியில் ஐந்து தலைமுறைகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இட நெருக்கடியில் வசித்துவருகிறோம்.
எங்களுக்கு, நத்தம் புறம்போக்கு இடத்தில் இடம் ஒதுக்கி தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், தனிநபர் ஒருவர் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு கடை கட்டுவது, எங்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை இழந்து விட்டோம்.
எனவே, ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டுவதை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.