ADDED : ஆக 21, 2024 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலவாக்கம்:தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் 119 மாணவ - மாணவியருக்கு நேற்று முன்தினம் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சைக்கிள்கள் வழங்கினார்.
அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்தவச்சலம் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.