/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
122 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
122 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : செப் 01, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 58 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
அதேபோல, விச்சூர் ஊராட்சி, மாம்பாக்கத்தில் இயங்கும் அரசு நிதி உதவிபெறும் அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் 64 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., -எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சைக்கிள்கள் வழங்கினார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உட்பட பலர்உடனிருந்தனர்.