/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று புஷ்ப பல்லக்கு உற்சவம்
ADDED : மே 04, 2024 10:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம், கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
இதில், மூன்றாம் நாள் உற்சவமான ஏப்., 25ல் கருடசேவை உற்சவமும், ஏப்., 29ம் தேதி காலை தேரோட்டமும் விமரிசையாக நடந்தது. 10ம் நாள் உற்சவமான கடந்த 2ல் வெட்டிவேர் சப்பரம் நடந்தது.
தொடர்ந்து விடையாற்றி உற்சவத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் காலை திருமஞ்சனமும், மாலை விடையாற்றி பெருமாள் புறப்பாடும் நடந்தது. மூன்றாம் நாள் விடையாற்றி உற்சவமான இன்று காலை திருமஞ்சனமும், மாலை புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
இதில், மல்லி, கனகாம்பரம், தவனம், சம்பங்கி என, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் அஷ்டபுஜ பெருமாள், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.