/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தேரி - சாலபோகம் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
/
புத்தேரி - சாலபோகம் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 06, 2024 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரியில் இருந்து, சாலபோகம் செல்லும் சாலை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. கனரக வாகன போக்குவரத்து மற்றும் மழையின் காரணமாக சாலையில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிகற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் சாலை சேதமடைந்த பகுதியில் குட்டைபோல மழை நீர் தேங்குகிறது. இருசக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன.
எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள புத்தேரி- - சாலபோகம் இடையே சேதமடைந்த நிலையில் உள்ள பழைய சாலையை அகற்றிவிட்டு புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.