தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நல்ல வளர்ச்சிக்கு மேட்டுப்பாத்தி முறை

நல்ல வளர்ச்சிக்கு மேட்டுப்பாத்தி முறை

நல்ல வளர்ச்சிக்கு மேட்டுப்பாத்தி முறை


ADDED : ஜூன் 09, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாத்தியில் கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது:

களிமண் நிலத்தில், நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். விளைப்பொருட்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன்.

அந்த வரிசையில், மேட்டுப்பாத்தியில் கீரை மற்றும் காய்கறி சாகுபடி செய்துள்ளேன். தரை மட்டத்திலிருந்து 1 அடி வரை மண்ணை மேடாக்கி பாத்திகள் அமைப்பதே மேட்டுப்பாத்தி முறை. இந்த முறையில் நல்ல மகசூல் கொடுக்கிறது.

குறிப்பாக, மேட்டுப்பாத்தி முறையில் கீரை, காய்கறிகள் சாகுபடி செய்யும் போது, விளைப்பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும். திடீரென மழை வந்தாலும் கீரை, காய்கறிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. மேலும், காய்கறி, கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:

– பி.சத்தியபாணி,

93808 57515.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us