sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீதிகளின் ராஜா காஞ்சி ராஜ வீதி கண்காட்சி நிறைவு விழா

/

வீதிகளின் ராஜா காஞ்சி ராஜ வீதி கண்காட்சி நிறைவு விழா

வீதிகளின் ராஜா காஞ்சி ராஜ வீதி கண்காட்சி நிறைவு விழா

வீதிகளின் ராஜா காஞ்சி ராஜ வீதி கண்காட்சி நிறைவு விழா


ADDED : மே 28, 2024 09:43 PM

Google News

ADDED : மே 28, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தின், கருடசேவை விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில், ஆண்டுதோறும், காஞ்சியின் வரலாறு தொடர்பாக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு, ‛வீதிகளின் ராஜா, காஞ்சிபுரம் ராஜ வீதி' என்ற தலைப்பில் வரலாற்று கண்காட்சி நடந்தது. இதில், காஞ்சியின் நான்கு ராஜவீதிகளும், அதை் சுற்றிலும் உள்ள பாரம்பரிய தலங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், ராஜவீதியை வலம் வந்த பல்வேறு மன்னர்கள், இந்தியாவிலும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் உள்ள கோவில் நகரங்கள் குறித்த புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றன.

கண்காட்சி நிறைவு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், காஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் கு. வெங்கடேசன், கண்காட்சியின் சிறப்பு குறித்து பேசினார்.

'மக்களை இணைக்கும் விழாக்கள்' என்ற பொருளில் கல்லுாரி மாணவ - மாணவியர் கவிதை வாசித்தனர். கட்டடவியலாளர் காஞ்சி ரமேஷ், கவிஞர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை கதைக் களமாக வைத்து இயற்றிய 'மத்தவிலாச பிரகசனம்' என்னும் நாடக நுாலை நிகழ்ச்சியில் பங்கேறறவரகளுக்கு தொழிலதிபர் வி.கே.தாமோதரன், நினைவுப் பரிசாக வழங்கினார். ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நிர்வாகி வளவன் அண்ணாதுரை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us