/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்
/
மாநகராட்சி கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்
மாநகராட்சி கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்
மாநகராட்சி கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்
ADDED : ஆக 04, 2024 01:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அகற்ற பயன்படுத்தப்படும் லாரி, கழிவுநீர், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் லாரி, ஜே.சி.பி., இயந்திர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் என, ஹாஸ்பிட்டல் சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்த இடத்தின் சுற்றுச்சுவரில், அரசமர செடிகள் வேரூன்றி செழித்து வளர்ந்து வருகின்றன. இதனால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில், சுற்றுச்சுவர் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை வேருடன் அகற்றி, விரிசல் ஏற்பட்ட பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.