உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி, முதலாவது வார்டில், காக்கநல்லூர் கிராமம் உள்ளது. பொது வினியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும், இப்பகுதி ரேஷன் கடைக்கான கட்டடம் சேதம் அடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில் அப்பகுதி ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வந்தது.
இதற்கான பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து நேற்று, புதிய ரேஷன் கடை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் பங்கேற்று ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.