/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆங்கில வாசிப்பு திறனை பெருக்க வாசகர்கள் ஆர்வம்
/
ஆங்கில வாசிப்பு திறனை பெருக்க வாசகர்கள் ஆர்வம்
ADDED : பிப் 10, 2025 01:17 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடக்கும் புத்தக திருவிழாவில், பல்வேறு பதிப்பகங்கள், ஆயிரக்கணக்கான தலைப்பில், லட்சக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன.
இலக்கியம், நாவல், வராலாறு, சமகால அரசியல், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் என, தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளிலும் முக்கியமான புத்தகங்கள் உள்ளன.
அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை வாசகர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக, தமிழ் நுால்களை காட்டிலும், ஆங்கில நுால்களை வாசிக்கும் பழக்கத்தை சிறுவர்கள், இளைய தலைமுறையினர், பெரியவர்கள் என, பலதரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினசரி நாளிதழ்கள் படித்தாலும், புத்தகங்களை வாசிப்பது சுவாரஷ்யமாக உள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் என, அனைத்து தரப்பினரும் தமிழ் மற்றும் ஆங்கில நுால்களை அதிகமாக வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் வார்த்தைகளின் உச்சரிப்பை எளிதாக பேச முடியும்.
வி.திலகவதி, காஞ்சிபுரம்.
ஆண்டுதோறும் புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரையில் படிக்கும் தமிழ், ஆங்கில நுால்கள் ஏராளமாக உள்ளன. உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் விளையாட்டு தொடர்பான நூல்கள் அறவே இல்லை. இதுபோன்ற புத்தகங்கள் இருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-ஜெ.சுதாகர், திருமால்பூர்.

