/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலக மக்கள் நன்மைக்காக சங்கர மடத்தில் பாராயணம்
/
உலக மக்கள் நன்மைக்காக சங்கர மடத்தில் பாராயணம்
ADDED : ஜூன் 25, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆசியுடன் உலக மக்கள் நன்மைக்காக, காஞ்சி காமகோடி வித்யா மண்டலி நிர்வாகி ஐஸ்வர்யா தலைமையில், சிறப்பு பாராயணம் நேற்று நடந்தது. இதில், குரு கீர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஸ்லோகங்கள் பாடப்பட்டன.
இதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பாராயணம் செய்தனர். பாராயணத்தில் பங்கேற்றவர்களுக்கு, சங்கரமடம் சார்பில் மஹா பெரியவா பிருந்தாவனத்தில், பிரசாதம் வழங்கப்பட்டது.