/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிந்தவாடி ஏரி பாசன கால்வாய் சீரமைப்பு
/
கோவிந்தவாடி ஏரி பாசன கால்வாய் சீரமைப்பு
ADDED : மே 04, 2024 11:19 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை போடாத இடத்தில், எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து, சாலை ஓரமாக செல்லும் மழைநீர் கால்வாய் சாலை விரிவாக்க பணிகளில் மூடப்பட்டது. இதனால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.
குறிப்பாக, துார்ந்து போன கோவிந்தவாடி ஏரி நீர் பாசன கால்வாய் ஜே.சி.பி., இயந்திரத்தின் வாயிலாக மண் எடுத்து, கரை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் நிறைவு பெற்றால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வசதியாக இருக்கும் என, சாலை விரிவாக்க பணியாளர்கள் தெரிவித்தனர்.