/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவூர் பேருந்து நிலையம் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு
/
கோவூர் பேருந்து நிலையம் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு
கோவூர் பேருந்து நிலையம் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு
கோவூர் பேருந்து நிலையம் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : மே 14, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: குன்றத்துார் -- போரூர் நெடுஞ்சாலையில், கோவூர் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. பராமரிப்பின்றி, பயன்பாடின்றி இருந்தது. இதனால், அரசு பேருந்துகள் நிலையத்தின் உள்ளே வராமல், வெளியே நெடுஞ்சாலையில் பயணியரை ஏற்றிச் சென்றது.
இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. நிலையத்திற்கு புதிதாக கூரை, தரை, இருக்கைகள் அமைக்கும்பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்த மாதம், இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.