/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் சேதமான கரை சீரமைக்க கோரிக்கை
/
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் சேதமான கரை சீரமைக்க கோரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் சேதமான கரை சீரமைக்க கோரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் சேதமான கரை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 03, 2024 12:53 AM

குன்றத்துார்:சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி 3.6 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி உயரமும் உடையது.
ஏரியின் கரை, குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் முதல் பூந்தமல்லி அருகே மேப்பூர் வரை, 8 கி.மீ., நீளத்திற்கு அமைந்துள்ளது.
இந்த கரையின் மீதுள்ள சிமென்ட் தடுப்புக்கள், ஆங்காங்கே சில இடங்களில் உடைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக, ஏரி தண்ணீர் திறந்து விடப்படும் 19 கண் மதகு அருகே, கரையின் உட்புற கற்கள் சரிந்துள்ளன. தற்காலிகமாக மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளன.
இதே போல், ஐந்து கண் மதகு அருகே, கரையின் வெளிபுறத்தில் கற்கள் சரிந்துள்ளன. இந்த ஏரிக்கரையின் சேதமான பகுதிகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்ததும், இந்தாண்டு வடகிழக்கு பருவமனைக்கு முன் கரை சீரமைக்கப்படும்' என்றார்.