/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் அரசு பள்ளியில் இரவு காவலர் நியமிக்க கோரிக்கை
/
வாலாஜாபாத் அரசு பள்ளியில் இரவு காவலர் நியமிக்க கோரிக்கை
வாலாஜாபாத் அரசு பள்ளியில் இரவு காவலர் நியமிக்க கோரிக்கை
வாலாஜாபாத் அரசு பள்ளியில் இரவு காவலர் நியமிக்க கோரிக்கை
ADDED : பிப் 14, 2025 07:38 PM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத்தில் கடந்த பல ஆண்டுளகாக அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளியில் 510 மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளியில், நுழைவாயில் பகுதியில் கேட் அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பள்ளியின் பின்புறமாக விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வழியிலும் கேட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு திரும்பியதற்கு பிறகு, சிலர் கேட் மீது ஏறி அல்லது கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று விடுவதாக தொடர்ந்து புகார் எழும்பி வருகிறது.
அவ்வாறு உள்ளே செல்லும் நபர்கள், பள்ளி வறண்டா பகுதிகளிலும், கை விடப்பட்ட பள்ளி கட்டட பகுதியிலும் மது அருந்துதல் மற்றும் தகாத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதனால், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், இரவு நேர காவலர் நியமனம் செய்து பள்ளி வளாகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.