/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல்வாய் கூட்டுச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
நெல்வாய் கூட்டுச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
நெல்வாய் கூட்டுச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
நெல்வாய் கூட்டுச்சாலையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : செப் 17, 2024 06:18 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர்- புக்கத்துறை மாநில நெடுஞ்சாலையில், நெல்வாய் கூட்டுச்சாலை உள்ளது. ரெட்டமங்கலம், வளத்தோடு, தோட்டநாவல், கரிக்கிலி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு, மைய பகுதியாக, இக்கூட்டுசாலை பகுதி உள்ளது.
சுற்றுவட்டார கிராமத்தினர், இங்கு வந்து, பேருந்து பிடித்து, மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
நெல்வாய் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இங்கு நிற்கும் பயணியர், அவசரகால உபாதை கழிக்க இடமில்லாமல், மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், பொது குடிநீர் வசதி இல்லாததால், அங்குள்ள கடைகளில் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி அருந்த வேண்டி உள்ளது.
எனவே, நெல்வாய் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்த பகுதியில், பொது கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.