/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவூர் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
காவூர் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 23, 2024 11:25 PM

உத்திரமேரூர், காவூரில் இருந்து, காவிதண்டலம் கிராமத்திற்கு செல்லும் 1 கி.மீ., தூரம் கொண்ட இணைப்பு சாலை உள்ளது. அப்பகுதியினர் தங்களது விவசாய நிலங்களுக்கு டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த வாகனங்களை இச்சாலை வழியாக இயக்கி செல்கின்றனர்.
இரு கிராமங்களுக்கான இந்த போக்குவரத்து சாலை குறுகியதாகவும், பழுதடைந்தும் காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் நெல் மற்றும் கரும்பு அறுவடை போன்ற இயந்திரங்களை இயக்குவதில் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, காவூர்- - காவிதண்டலம் இணைப்பு சாலையை சீரமைத்து அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.