/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்தியை காட்டி பணம் பறித்த மூவருக்கு காப்பு
/
கத்தியை காட்டி பணம் பறித்த மூவருக்கு காப்பு
ADDED : மே 30, 2024 07:32 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர், சேதுபதி, 25; இவர், வையாவூர் சாலையில் உள்ள தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி, இரவு 10:00 மணிக்கு, தாபா ஹோட்டல் வேலை முடித்து, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அவரை மடக்கிய மூன்று பேர், கத்தியை காட்டி, அவரது பாக்கெட்டிலிருந்து, 3,000 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில், சேதுபதி புகார் அளித்தார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், பணம் பறித்து சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 23, சஞ்சய், 21, மற்றும் வெங்கடேசன், 28, ஆகியோர் என தெரிய வந்தது. அதையடுத்து, காஞ்சி தாலுகா போலீசார், மூன்று பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.