/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'காப்பு'
/
வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'காப்பு'
வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'காப்பு'
வியாபாரிகளை பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மே 06, 2024 03:30 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன், 29. இவர், கிழக்கு ராஜவீதியில், காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரிடம், உதயா, 19, என்ற வாலிபர், கடந்த 3ம் தேதி, மது அருந்த பணம் கேட்டுள்ளார்.
அதற்கு இவர் மறுத்த காரணத்தால், செங்கல் எடுத்து இவர் மீது வீசியுள்ளார். இதையடுத்து, கத்தி எடுத்து, இளங்கோவனை குத்தி கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அருகில் உள்ள கடை வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, அங்கிருந்த கார் ஒன்றின் கண்ணாடிகளை செங்கல்லால் அடித்து உடைத்து, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து, இளங்கோவன் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், செட்டிக்குளம் பள்ளத் தெருவைச் சேர்ந்த உதயா, 19, என்ற வாலிபரை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.