/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரிய வகை ஆந்தை திருத்தணியில் மீட்பு
/
அரிய வகை ஆந்தை திருத்தணியில் மீட்பு
ADDED : மே 13, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருத்தணி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் மகேஷ், 45. இவர் தன் வீட்டின் அருகே கூண்டு வைத்து கோழி வளர்த்து வருகிறார்.
நேற்று காலை, மகேஷ் கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதற்கு வீட்டிலிருந்து சென்றார். அப்போது அங்கு ஒரு அரிய வகையான ஆந்தை ஒன்று இருந்ததை பார்த்தார்.
திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து திருத்தணி வனச்சரகர் அருள் மற்றும் வன ஊழியர்கள் வந்து ஆந்தையை மீட்டு, திருத்தணி வனப்பகுதியில் விட்டனர்.