/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடல் அலையில் சிக்கிய மூவர் மீட்பு
/
கடல் அலையில் சிக்கிய மூவர் மீட்பு
ADDED : ஜூன் 01, 2024 05:50 AM
சென்னை, : கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த 18 வயது சிறுவன், உறவினர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். கடலில் குளித்த அவரை, அலை இழுத்துச்சென்றது.
அங்கு பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தின், மெரினா உயிர் பாதுகாப்பு பிரிவு போலீசார், சிறுவனை மீட்டனர்.
அதேபோல, வேளச்சேரி ராம் நகரைச் சேர்ந்த மனோகர், 38, என்பவரும் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடினார். அவரையும் தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு மீட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணிக்கு உறவினர்களுடன் சென்ற, 5 வயது சிறுவன் நிரஞ்சனை கடல் அலைகள் இழுத்துச் சென்றது.
இந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர். ஒரு வாரத்தில் மூன்று பேரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர்கள் சூடேஸ்வரன், சோலைராஜா உள்ளிட்டோரை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று பாராட்டினார்.