/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலைத்துறை அலுவலக கட்டட பணி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு
/
நெடுஞ்சாலைத்துறை அலுவலக கட்டட பணி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு
நெடுஞ்சாலைத்துறை அலுவலக கட்டட பணி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு
நெடுஞ்சாலைத்துறை அலுவலக கட்டட பணி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு
ADDED : மே 30, 2024 10:39 PM
காஞ்சிபுரம்:போக்குவரத்துக்கு இடையூறாக இந்திரா நகருக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் கட்டுவதற்கு, குடியிருப்போர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கனகதுர்க்கை அம்மன் நகர் மற்றும் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனு விபரம்:
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில், கோனேரிக்குப்பம் ஊராட்சி, இந்திரா நகர் முகப்பு பகுதியில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் கட்டுமானப் பணிக்காக, மிக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டது. கட்டுமான பணி துவங்கிய இடம், நீர்நிலை புறம்போக்கு என்பதால், அப்பகுதிமக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும், கட்டுமான பணிக்காக எடுக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால், கால்நடைகள் மட்டுமின்றி பாதசாரிகளும் பள்ளத்தில் தவறி விழும் சூழல் உள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறியும் சில அதிகாரிகள் மீண்டும் கட்டடம் கட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும் தகவல் வருகிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆட்சியின்போது, காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு செல்ல பொன்னேரி கரையின் கரையை பலப்படுத்தி அதன் மீது சாலை அமைத்து போடப்பட்ட அந்த சாலையில் கட்டடம் கட்ட ஏதுவான இடம் கிடையாது.
அது நீர்நிலை புறம்போக்கு இடமாக உள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த இடத்தில் அதுபோன்ற அரசு கட்டடம் கட்டுவதற்கு எந்த அனுமதி யார் கொடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இது சம்பந்தமாக எங்கள் ஊராட்சி வி.ஏ,ஓ., பொதுமக்கள் குறுஞ்செய்தி வாயிலாக புகார் அனுப்பியுள்ளனர். நெஞ்சாலைத் துறை கட்டடம் கட்டுவதால் எங்கள் நகருக்கு செல்லும் சாலையின் ஒரு பாதை அடைக்கப்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.