/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய வாகனங்களை வழங்க ஓட்டுனர்கள் சங்கத்தில் தீர்மானம்
/
புதிய வாகனங்களை வழங்க ஓட்டுனர்கள் சங்கத்தில் தீர்மானம்
புதிய வாகனங்களை வழங்க ஓட்டுனர்கள் சங்கத்தில் தீர்மானம்
புதிய வாகனங்களை வழங்க ஓட்டுனர்கள் சங்கத்தில் தீர்மானம்
ADDED : ஜூன் 18, 2024 05:03 AM
காஞ்சிபுரம் : தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் இருக்கும் அரசுத்துறையில் காலியாக இருக்கும் ஓட்டுனர் பணி இடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக நிரப்ப வேண்டும்.
கழிவு நீக்கம் செய்த மற்றும் 15 ஆண்டுகள் முடிந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக, புதிய வாகனங்களை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் சரண்டர் ஆகியவை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊர்தி ஓட்டுனர்கள் பலர் பங்கேற்றனர்.