ADDED : ஜூலை 09, 2024 08:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் பிரதான சாலையில் இருந்து, ஒழையூர் கிராமத்திற்கு செல்லும் சாலை 2 கி.மீ., துாரம் உள்ளது. இச்சாலையோரம் மின்கம்பங்கள் இருந்தும், மின்விளக்கு பொருத்தப்படவில்லை.
சாலையின் இருபக்கமும், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், விஷ ஜந்துக்கள் இரவு நேரத்தில், இரை தேட இச்சாலையில் உலா வருகின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, வையாவூர் பிரதான சாலையில் இருந்து, ஒழையூர் செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, ஒழையூர் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.