/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
/
சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : மார் 05, 2025 01:10 AM

புத்தேரி:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெரு வழியாக, புத்தேரி, சாலபோகம், பாக்குபேட்டை, முசரவாக்கம், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிக்கு பலர் செல்கின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோரம் உள்ள வடிகால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், கைலாசநாதர் கோவில் தெருவில் சாலையோரம் உள்ள கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.