/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : செப் 02, 2024 05:50 AM

காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது.
இந்த நான்குவழிச் சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலை வழியாக, பெங்களூரு, ஒசூர், வேலுார், ராணிப்பேட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து, சென்னைக்கு விரைவு, சாதாரண பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன.
லோடு ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் என, ஆங்காங்கே டயர் பஞ்சராகி சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.இதுபோல, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, பிற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், ஒளிரும் தடுப்பு சாதனம் அமைப்பதில்லை.
குறிப்பாக, கீழம்பி, வெள்ளைகேட் ஆகிய மேம்பாலங்களின் ஓரம் பழுதாகும் வாகனங்கள், சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. எச்சரிக்கை செய்வதற்கு சிறிய மரச்செடியை சொருகி வைக்கின்றனர்.
இது, வாகன விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதை தவிர்க்க, ஒளிரும் எச்சரிக்கை சாதனங்களை பொருத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.