/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
/
மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 03:44 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம் அருகேயுள்ள திருமுக்கூடல் கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக சாலவாக்கம், உத்திரமேரூர், மதுராந்தகம் என ஏராளமான கிராமங்களுக்கு செல்ல முடியும்.
ஆனால், இந்த பாலத்தில் தற்போது வரை மின்விளக்கு கூட, நெடுஞ்சாலை துறையினர் அமைக்காதது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலை துறையினர் வாயிலாக திருமுக்கூடல் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டியது முதல் தற்போது வரை, மின் விளக்கு அமைக்காமல், அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.
நெடுஞ்சாலை துறையும் கண்டுகொள்ளாத நிலையில், உள்ளாட்சி நிர்வாகமும் மின்விளக்கு அமைக்காமல் இருப்பதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.