/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அக்கமாபுரம் சாலையோரம் மண் அரிப்பால் ஆபத்து
/
அக்கமாபுரம் சாலையோரம் மண் அரிப்பால் ஆபத்து
ADDED : ஜூன் 22, 2024 11:26 PM

அக்கமாபுரம் : எடையார்பாக்கம் - அக்கமாபுரம் - நாகப்பட்டு சாலை உள்ளது. இந்த சாலை, முதல்வர் சாலை விரிவாக்க திட்டத்தில், புதிய சாலை போட்டுஉள்ளனர். இந்த சாலை ஓரம், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
மேலும், அக்கமாபுரம் இருளர் குடியிருப்பு வளைவு, அக்கமாபுரம் ஏரிக்கரை சாலையோரம், தார் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில், போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால், சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதுார்வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஆய்வு செய்து சாலையோரம் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.