/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கத்தில் ரூ.64 லட்சத்தில் சாலை சீரமைப்பு
/
சாலவாக்கத்தில் ரூ.64 லட்சத்தில் சாலை சீரமைப்பு
ADDED : ஆக 02, 2024 01:56 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே துவங்கி, காவல் நிலையம் வழியாக குரும்பரை செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை, சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், அப்பகுதி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இச்சாலையை சீரமைக்க அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, முதல்வரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 64 லட்சம் ரூபாய் செலவில் இச்சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், பணியினை துவக்கி வைத்தார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் மாவட்ட கவுன்சிலர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.