ADDED : மே 31, 2024 02:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு பகுதியில் இருந்து, புத்தேரி தெரு, எஸ்.வி.என்., பிள்ளை தெரு, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருவோர் ஒ.பி.,குளம் பள்ளத்தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இந்த சாலையோரம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.
குப்பையை மாநகராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாமல் குப்பையை தீயிட்டு எரிக்கின்றனர்.
குப்பையில் இருந்து வெளியேறும் புகையால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், சாலையை மறைக்கும் புகையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மேலும், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. எனவே, ஒ.பி., குளம் பள்ளத்தெரு சாலையோரம் குப்பை கொட்ட தடை விதித்து, அங்குள்ள குப்பையை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.