/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரிவாளை காட்டி மிரட்டி ரூ.15,000 கொள்ளை
/
அரிவாளை காட்டி மிரட்டி ரூ.15,000 கொள்ளை
ADDED : மே 28, 2024 11:44 PM
படப்பை:படப்பை அருகே துணிக்கடையில், 15,000 ரூபாய்க்கு துணிகளை வாங்கி விட்டு, அரிவாளை காட்டி மிரட்டி, பணம் தராமல் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
படப்பை அருகே சாலமங்கலத்தில் தனியார் துணிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் முக கவசம் அணிந்து சென்ற மர்ம நபர்கள் மூன்று பேர், 15,000 ரூபாய் மதிப்பில் துணிகளை வாங்கியுள்ளனர்.
கடை ஊழியர் பணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் தன் இடுப்பில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்து காட்டி, ஊழியரை மிரட்டி பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர்.
இதுகுறித்து, கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.