/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காரில் இருந்த ரூ.4.05 லட்சம் திருட்டு
/
காரில் இருந்த ரூ.4.05 லட்சம் திருட்டு
ADDED : மார் 10, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அருகே, செரப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 31. ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இம்மாதம் 5ம் தேதி, 4 லட்சத்து 5,000 ரூபாய் பணத்துடன் ‛ஹூண்டாய்' காரில் சுங்குவார்சத்திரம் சார் -- பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
பணத்தை காரில் வைத்துவிட்டு, சார் -- பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே சென்று, சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்த போது, காரில் வைத்திருந்த 4 லட்சத்து 5,000 ரூபாய் பணம் காணாமல் போனது தெரிந்தது.
இது குறித்து, ராஜேஷ், சுங்குவார்சத்திரம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.