/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஆப்' வாயிலாக ரூ.44,000 'அபேஸ்'
/
'ஆப்' வாயிலாக ரூ.44,000 'அபேஸ்'
ADDED : மே 11, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, ராயப்பேட்டை, கரீம் சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது, 39; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், நேற்று முன்தினம் இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கிரெடிட் கார்டின் பணமதிப்பை அதிகரித்து தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய அப்துல் ஹமீது, அவர் சொல்வதை போல் செய்தார். ஐ.வி.ஆர்., என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஓ.டி.பி.,யை பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், அப்துல் ஹமீது வங்கி கணக்கில் இருந்து, 44,000 ரூபாய் எடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்தவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.