/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒருதலைபட்சமாக செயல்படும் ஆர்.டி.ஐ., ஊழல் ஒழிப்பு குழு நிர்வாகி குற்றச்சாட்டு
/
ஒருதலைபட்சமாக செயல்படும் ஆர்.டி.ஐ., ஊழல் ஒழிப்பு குழு நிர்வாகி குற்றச்சாட்டு
ஒருதலைபட்சமாக செயல்படும் ஆர்.டி.ஐ., ஊழல் ஒழிப்பு குழு நிர்வாகி குற்றச்சாட்டு
ஒருதலைபட்சமாக செயல்படும் ஆர்.டி.ஐ., ஊழல் ஒழிப்பு குழு நிர்வாகி குற்றச்சாட்டு
ADDED : ஆக 21, 2024 09:38 PM
காஞ்சிபுரம்:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசு துறைகளின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களை, பொது மக்கள் எளிதாக பெறலாம். இதற்கு சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலருக்கு மனு செய்ய வேண்டும்.
அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு, 30 நாட்களில் பதில் கிடைக்காவிட்டால், அவரின் உயர் அதிகாரியிடம், மேல் முறையீடு செய்யலாம். அவர் நிலையிலும் தகவல் கிடைக்காவிட்டால், மாநில தகவல் ஆணையத்தில் முறையிடலாம்.
இவ்வாறு வரும், இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் தொடர்பாக தகவல் ஆணையர்கள் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வமாக உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.
தகவல் அளிக்க மறுக்கும் பொது அலுவலருக்கு, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல் ஆணையர்களின் உத்தரவுகள், சில சமயங்களில் பொது அலுவலர்களுக்கு சாதகமாக இருந்தால், மனுதாரர்கள் நீதிமன்றம் செல்லலாம். இதற்கு, எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் சான்றாக இருக்க வேண்டும்.
தமிழக தகவல் ஆணைய வழக்கு விசாரணை விபரங்கள், உத்தரவுகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இது, பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
தற்போதுள்ள தகவல் ஆணையர்களில் சிலர், வேண்டுமென்றே வழக்கு விசாரணைகளை கிடப்பில் போடுவதாகவும், வழக்கு விசாரணை ஆளில்லாத ஆணையர் பிரிவுக்கு வேண்டுமென வேறு ஒரு பிரிவுக்கு மாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, 2019ம் ஆண்டு போடப்பட்ட வழக்குகள், ஐந்து ஆண்டுகளாகியும் இன்னமும் தீர்க்கவில்லை. வயதான மனுதாரர்களை வேண்டுமென அலைக்கழிக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய ஊழல் ஒழிப்பு குழுவைச் சேர்ந்த ரத்தின பாண்டியன், 70, கூறியதாவது:
பூசிவாக்கம் சித்தேரி பள்ள மதகு நீர் பாசனம் பெறும் நஞ்சை நிலத்தில், அதிகாரிகளின் துணையுடன் சட்ட விரோதமாக தனியார் வீட்டுமனை பிரிவு அமைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை தகவல் ஆணையத்தில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
அதுவே, கடந்தாண்டு நவம்பர் மாதம், விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தகவல் ஆணைய வழக்கு, நடப்பாண்டு மார்ச் மாதம் விசாரணை செய்து முடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், என்னுடைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான் வயோதிகம் அடைந்தவர். என்னை அலைக்கழிக்க வைக்கின்றனர்.
தகவல் ஆணையரிடம் நேரடியாக சென்று முறையிட்ட போது, 'தகவல் ஆணையத்தின் விசாரணை விதிகளை சரியாக கடைப்பிடித்துள்ளோம்' என மழுப்பலாக அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர்.
எனவே, தகவல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். அனைத்து வழக்குகளும் பாரபட்சம் இன்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.