/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகர் வரதர் கோவிலில் 9-ல் சகஸ்ரநாம அர்ச்சனை
/
பெருநகர் வரதர் கோவிலில் 9-ல் சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED : மார் 06, 2025 07:58 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில், பெருந்தேவி நாயகி சமேத திருவூரக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி வழிபாடு, ஹயக்ரீவர் சகஸ்ரநாம அர்ச்சனை, அனுமன் ஜயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான ஹயக்ரீவர் ஷஹஸ்ரநாம அர்ச்சனை, நாளை மறுதினம், நடக்க உள்ளது. முன்னதாக, காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை மூலவருக்கு பால், நெய், இளநீர், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சகஸ்ரநாம சொற்பொழிவு நடக்க உள்ளது.
அதை தொடர்ந்து, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பக்தர்கள், பாகவதோத்தமர்கள் வேத கீர்த்தனைகள் பாடியவாறு, ஹயக்ரீவர் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்க உள்ளது. நிகழ்ச்சியின் இறுதியாக, தவன உத்சவம் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.