/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கள்ளச்சாராயம் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர்
/
கள்ளச்சாராயம் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர்
கள்ளச்சாராயம் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர்
கள்ளச்சாராயம் விற்றால் தகவல் தெரிவிக்கலாம்: கலெக்டர்
ADDED : ஜூன் 26, 2024 11:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர், கள்ளச்சாராயத்தை கடத்துவோர் மற்றும் கஞ்சா, குட்கா, பான்மசாலா ஆகிய தடை விதிக்கப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து தெரிய வந்தால், கலெக்டர், எஸ்.பி., ஆகியோரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்கப்படுவோரின் பெயர்கள் மற்றும் மொபைல் எண்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி 94441 34000; காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., 94442 12749; மதுவிலக்கு பிரிவு வாட்ஸாப் எண் 82489 86885; சென்னை கட்டுப்பாடு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்- 10581 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என, காவல்துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.