நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை, ராஜாஜி மார்க்கெட் அருகில் உள்ள வீடு இல்லாதவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இவ்வளாகத்தில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில், அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் தலைமையில், தன்னார்வலர்கள் மற்றும் விடுதியில் தங்கியுள்ள பயனாளிகள் ஒன்றிணைந்து, பூவரசு, வேம்பு உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகளும், அரளி, பாரிஜாதம், பவழமல்லி உள்ளிட்ட மலர் செடிகளையும் நடவு செய்தனர்.

