நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம குமாரி தலைமையில் நேற்று நடந்தது.
மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்து விளக்கேற்றி ஆண்டு விழாவை துவக்கி வைத்தார். பள்ளி மாணவ - மாணவியரின் குழுநடனம், வில்லுப்பாட்டு, நாடகம் என, பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு தலைமைஆசிரியர் பிரேமகுமாரி மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.