/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் குளத்தில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
/
கோவில் குளத்தில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
கோவில் குளத்தில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
கோவில் குளத்தில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
ADDED : ஏப் 12, 2024 10:32 PM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, நேற்று மதியம், சென்னை திருநின்றவூர், அந்தோணி நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் 40, ஆட்டோ ஓட்டுனர் என்பவர், தன் தாய் மற்றும் சகோதரர்களுடன் ஆட்டோ மூலம் வந்தார்.
கமலக்கண்ணனுக்கு மனைவி மற்றும் 13 வயதில் மகன் உள்ளனர். கோவிலுக்கு வந்த கமலக்கண்ணன், பூஜைக்கு செல்வதற்கு முன், அங்குள்ள குளத்தில் புனித நீராட இறங்கினார். கோவில் குளத்தில் மூழ்கிய அவர், வெகு நேரமாகியும் திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி பலரும் குளத்தில் இறங்கி தேடினர். நீண்ட நேரமாகியும் கிடைக்கவில்லை.
தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கமலக்கண்ணனின் உடலை குளத்தில் இறங்கி படகு மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.