/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செங்கை மாவட்ட செஸ் போட்டி: சூர்யகுமார், அம்ருதா முதலிடம்
/
செங்கை மாவட்ட செஸ் போட்டி: சூர்யகுமார், அம்ருதா முதலிடம்
செங்கை மாவட்ட செஸ் போட்டி: சூர்யகுமார், அம்ருதா முதலிடம்
செங்கை மாவட்ட செஸ் போட்டி: சூர்யகுமார், அம்ருதா முதலிடம்
ADDED : ஏப் 08, 2024 11:27 PM

சென்னை : செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் மேக்னஸ் செஸ் அகாடமி இணைந்து, மாவட்ட அளவிலான முதலாவது செஸ் போட்டி, மேடவாக்கத்தில் உள்ள சாய்ராம் லியோ முத்து பள்ளியில் நேற்று முன்தினம் நடத்தின.
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இப்போட்டியில், 25 சர்வதேச வீரர்கள் உட்பட 502 பேர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில் எட்டு வயது பிரிவில், சிறுவரில் ரிஷி நீலஞ்சன், சிறுமியரில் ஸ்மிருத்திகா, 10 வயதில் சிறுவரில் சூர்யகுமார் அம்ருதா ஹேமல் ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.
அதேபோல், 12 வயதில், ரோஷன் மற்றும் ரியா ஹேமல்; 16 வயதில் பிரவீன் மற்றும் சாய் தனிஷ்கா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சாய்ராம் பள்ளி முதல்வர் லதா பரிசுகள் வழங்கினார்.