/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவூர் சிவன் கோவில் நிலத்தில் 'கப்'படிக்கும் கழிவுநீர், இறைச்சி கழிவு
/
கோவூர் சிவன் கோவில் நிலத்தில் 'கப்'படிக்கும் கழிவுநீர், இறைச்சி கழிவு
கோவூர் சிவன் கோவில் நிலத்தில் 'கப்'படிக்கும் கழிவுநீர், இறைச்சி கழிவு
கோவூர் சிவன் கோவில் நிலத்தில் 'கப்'படிக்கும் கழிவுநீர், இறைச்சி கழிவு
ADDED : ஜூலை 23, 2024 11:00 PM

குன்றத்துார்:கழிவுநீர், இறைச்சி கழிவு கொட்டுவதால், கோவூர் சிவன் கோவில் நிலம் மாசடைந்துள்ளது.
சென்னை, குன்றத்துார் அருகே கோவூரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பழமையான சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலம், கோவூரில் இருந்து பட்டூர் செல்லும் சாலையில் உள்ளது.
இந்த நிலத்தில் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படும் கழிவுநீர், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி, மாசு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை புறநகரில் கோவூர் ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு, இடத்தின் தேவை அதிகம் உள்ளது. இந்நிலையில், கோவிலுக்குச் சொந்தமான 22 ஏக்கர் காலி நிலம், பயன்பாடின்றி உள்ளது.
இந்த நிலத்தில், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பட்டூர் பகுதியில் இயங்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளில் வீணாகும் கோழி, ஆடு, மாடு ஆகிய இறைச்சிக் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.
மேலும் கோவூர், பரணிபுத்துார், அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், பெரியபணிச்சேரி ஆகிய ஊராட்சியில் உள்ள குடியிருப்பில் இருந்து அகற்றப்படும் கழிவுநீர், டேங்கர் லாரிகள் வாயிலாக கொண்டு வந்து வெளியேற்றப்படுகிறது.
மேலும், கோவூர் ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகின்றன. இதனால், அந்த பகுதியில் நிலம், நிலத்தடி நீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த கோவில் நிலத்தை குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.